Advertisement

இந்தியாவை வீழ்த்தியது குறித்து பேசிய தெ.ஆ. கேப்டன் டெம்பா பவுமா!

வெண்டர் டுசென், டேவிட் மில்லர் இருவரும் பினிஷர்களாக சிறப்பாக செயல்பட்டனர் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பாராட்டியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 10, 2022 • 11:45 AM
Skipper Bavuma Applauds Rassie, Miller's Match Winning Knock Against India
Skipper Bavuma Applauds Rassie, Miller's Match Winning Knock Against India (Image Source: Google)
Advertisement

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர் இஷான் கிஷன் 48 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 76 ரன்களை குவித்து அசத்தினார். குறிப்பாக ஸ்பின்னர்கள் சாம்சி, மகாராஜ் இருவரின் ஓவர்களில் அதிக ரன்கள் கசிந்தது.

Trending


அடுத்து ருதுராஜ் 23 (15), ஸ்ரேயஸ் ஐயர் 36 (27), ரிஷப் பந்த் 29 (16), ஹார்திக் பாண்டியா 31 (12) ஆகியோரும் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கினார்கள். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 211/4 ரன்களை குவித்து அசத்தியது.

அடுத்துக் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் 22 (18), பவுமா 10 (8), பிரிடோயஸ் 29 (13) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். இதனால், தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் வெண்டர் டூசென், மில்லர் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். துஷன் நிதானம் காட்ட, மில்லர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து, இறுதிக் கட்டத்தில் துஷனும் சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

இதனால், தென் ஆப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் 212/3 ரன்களை சேர்த்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. துஷன் 75 (46), மில்லர் 64 (31) ஆகியோர் கடைசிவரை களத்தில் இருந்தார்கள்.

இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய பவுமா, “இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்பினோம். இருப்பினும், பந்துவீச்சை சரியாக சமாளிக்க முடியவில்லை. இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். ஸ்பின்னர்கள் பந்துவீச வரும்போதெல்லாம் ரன்களை குவித்து, எங்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தினார்கள். இந்த விஷயம் எங்களுக்கு பயத்தை கொடுத்தது. இருப்பினும், இரண்டாவது நாங்களும் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொண்டோம்.

வெண்டர் டுசென், டேவிட் மில்லர் இருவரும் பினிஷர்களாக சிறப்பாக செயல்பட்டனர். இதில் டுசென் மெதுவாக ஆரம்பித்து, இறுதியில் அதிரடி காட்டியது பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. துஷன் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. இங்கு வெயில் அதிகம். இதனால், சில பயிற்சி திட்டங்களை மாற்றி, குறைவான நேரம் மட்டும் பயிற்சி செய்ய முடிவு செய்துள்ளோம். வீரர்களின் உடல்நலம்தான் எங்களுக்கு முக்கியம்” எனத் தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement