
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் பவுமா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 76 ரன்களையும், ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்களையும் குவித்தனர்.
அதனைத் தொடர்ந்து 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் மிடில் ஆர்டரில் விளையாடிய மில்லர் மற்றும் ராசி வேண்டர்டசன் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 19.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 212 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.