
SL have won a thriller! They have won by four wickets to level the series 1-1. (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ருதுராஜ் கெய்க் வாட் (21), தேவ்தத் படிக்கல் (29), ஷிகர் தவான் (40) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே எடுத்தது.