
SL v WI 1st Test: Lankans In Driving Seat As They Spin A Web Around The Windies (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கல்லெயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது. கருணரத்னே 132 ரன்னும், டி சில்வா 56 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நிசங்கா அரை சதமடித்து 56 ரன்னில் வெளியேறினார்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டி சில்வா 61 ரன்னில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கருணரத்னே 147 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சண்டிமால் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இலங்கை அணி 133.5 ஓவரில் 386 ரன்னில் ஆல் அவுட்டானது.