
SL v WI 1st Test: West Indies Restrict Sri Lanka To 204 In First Innings, Permaul Picks Up A 5-Fer (Image Source: Google)
இலங்கை- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கலேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை பதும் நிஷங்கா 61 ரன்களுடனும், ஒஷாதா ஃபெர்னாண்டோ 2 ரன்களுடனும் நாளைய போட்டியை தொடங்கினர். இதில் ஃபெர்னாண்டோ 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மறுமுனையிலிருந்த நிஷங்காவும் 73 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் வீராசாமி பெருமாளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.