Advertisement
Advertisement
Advertisement

SL vs AUS, 1st Test: இலங்கை 212ல் ஆல் அவுட்; ஆஸ்திரேலியா தடுமாற்றம்!

Sri Lanka vs Australia: இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 212 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணியும் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 29, 2022 • 17:45 PM
SL vs AUS, 1st Test: 13 wickets fell in the day and it is Australia who are slightly ahead
SL vs AUS, 1st Test: 13 wickets fell in the day and it is Australia who are slightly ahead (Image Source: Google)
Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 3 டி20, 5 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் டி20 தொடரை ஆஸ்திரேலியாவும், ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றின.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கலேவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

Trending


அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 23 ரன்களிலும், கேப்டன் கருணரத்னே 28 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய குசால் மெண்டிஸ், தனஞ்செய டி சில்வா, சண்டிமல் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். 

பின் மேத்யூஸுடன் ஜோடி சேர்ந்த டிக்வெல்லா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். பின்னர் மேத்யூஸ் 39 ரன்களிலும், டிக்வெல்லா 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 5 விக்கெட்டுகளையும், ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், ஸ்டார்க் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டேவிட் வார்னர் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்னஸ் லபுசாக்னே 13 ரன்களில் வெளியேறினார். ஆடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தும் 6 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் உஸ்மான் கவாஜா 47 ரன்களுடனும், ட்ராவிஸ் ஹெட் 6 ரன்காளுடனும் களத்தில் உள்ளனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement