Advertisement

SL vs AUS, 5th ODI: அணியைக் காப்பாற்றிய கருணரத்னே; ஆஸிக்கு 161 டார்கெட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
SL vs AUS, 5th ODI: Australia restricted Sri Lanka by 160 runs
SL vs AUS, 5th ODI: Australia restricted Sri Lanka by 160 runs (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 24, 2022 • 06:07 PM

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 24, 2022 • 06:07 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து களமிறங்கியது.

Trending

அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 2 ரன்னிலும், குணத்திலகா 8 ரன்னிலும், தினேஷ் சண்டிமல் 6 ரன்களிலும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த குசால் மெண்டீஸ், சரித் அசலங்கா, கேப்டன் தசுன் ஷான்கா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதையடுத்து களமிறங்கிய சமிகா கருணரத்னே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர்.

ஆனாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சமிகா கருணரத்னே அரைசதம் கடந்தார். அதன்பின் 75 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் விக்கெட்டை இழந்தார்.

இதனால் 43.1 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹசில்வுட், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement