SL vs BAN, 2nd ODI: பர்வேஸ், ஹிரிடோய் அரைசதம்; இலங்கை அணிக்கு 249 டார்கெட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 249 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

SL vs BAN, 2nd ODI: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி வீரர்கள் பர்வேஸ் ஹொசைன் எமன் மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் தன்ஸித் ஹசன் 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 14 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த பர்வேஸ் ஹொசைன் மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பர்வேஸ் ஹொசைன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பர்வேஸ் ஹொசைன் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 67 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: LIVE Cricket Score
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் 9 ரன்களுக்கும், ஷமிம் ஹொசைன் 22 ரன்னிலும், ஜக்கார் அலி 24 ரன்னிலும் என ஆட்டமிழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த தாவ்ஹித் ஹிரிடோயும் 51 ரன்களில் ரன் அவுட்டானார். இறுதியில் தன்ஸிம் ஹசன் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 33 ரன்களைச் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் வங்கதேச அணி 45.5 ஓவர்களில் 248 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now