-mdl.jpg)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி, வங்கதேச அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - திமுத் கருணரத்னே இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த இணை சீரான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், கருணாரத்னே 18 ரன்களிலும், பதும் நிசங்கா 40 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து, குஷால் மெண்டிஸ் மற்றும் சதீரா சமரவிக்கிரம ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி இலங்கை அணியின் ஸ்கோரினை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். குஷால் மெண்டிஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அதன்பின் களமிறங்கியவர்களில், அசலங்கா 10, தனஞ்ஜெயா டி சில்வா 6, தாசுன் ஷானகா 24 ஆட்டமிழந்து வெளியேறினர். களமிறங்கியது முதலே சிறப்பாக விளையாடிய சதீரா சமரவிக்கிரம 72 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்தது. வங்கதேசதம் தரப்பில் ஹாசன் மஹ்முத் மற்றும் டஸ்கின் அகமது தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.