Advertisement
Advertisement

இலங்கை vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan July 26, 2024 • 15:10 PM
இலங்கை vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)

Sri Lanka vs India 1st T20I Dream11 Prediction: இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நாளை (ஜூலை 27) முதல் தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடரில் பங்கேறும் இந்தியா மற்றும் இலங்கை டி20 அணிகள் அறிவிக்கப்பட்டு, தற்சமயம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நாளை நடைபெறும் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

SL vs IND 1st T20I: போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - இலங்கை vs இந்தியா
  • இடம் - பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லேகலே
  • நேரம் - ஜூலை 27, இரவு 7 மணி

SL vs IND 1st T20I Pitch Report

இலங்கையில் உள்ள பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 23 டி20 சர்வதேசப் போட்டிகள் நடந்துள்ளன. அதில் 12 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 8 முறை இரண்டாவது பேட்டிங் செய்த கணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி குறைந்தபட்ச சராசரியாக 168 ரன்கள் உள்ளது. மேலும் இந்த மைதானம் பேட்டர்களுக்கு பெருமளவு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 263 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SL vs IND T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 29
  • இந்தியா - 19
  • இலங்கை - 09
  • முடிவில்லை- 01

SL vs IND 1st T20I: Where to Watch?

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையில் பார்க்க முடியும். இந்த போட்டிகளின் நேரடி ஸ்ட்ரீமிங் ஓடிடி இயங்குதளமான சோனி லிவ் (SonyLIV) தளத்திலும் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி ரசிகர்கள் நேலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sri Lanka vs India 1st T20I Probable Playing XI

இந்திய அணி உத்தேச லெவன்: ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த்/சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய்/வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

இலங்கை அணி உத்தேச லெவன் : பதும் நிஷங்க, குசல் பெரேரா, குசால் மெண்டிஸ்,சரித் அசலங்கா (கேப்டன்), அவிஷ்க ஃபெர்னாண்டோ, தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷனா, மதீஷ பதிரானா, பினுரா ஃபெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்கா.

Sri Lanka vs India 1st T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - குசல் மெண்டிஸ்
  • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குசால் பெரேரா
  • ஆல்ரவுண்டர்கள் - தசுன் ஷனகா, அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), வனிந்து ஹசரங்க (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - முகமது சிராஜ், மதீஷா பதிரானா

SL vs IND 1st T20 Dream11 Prediction, Today Match  SL vs IND, SL vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs IND Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs India

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement