இலங்கை vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று பல்லேகலேவில் நடைபெறவுள்ளது.
Sri Lanka vs India 2nd T20I Dream11 Prediction: இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நேற்று முதல் தொடங்கியது. அதன்படி நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜூலை 28) நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இலங்கை அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கவுள்ளது. அதேசமயம் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடவுள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
SL vs IND 2nd T20I: போட்டி தகவல்கள்
Trending
மோதும் அணிகள் - இலங்கை vs இந்தியா
இடம் - பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லேகலே
நேரம் - ஜூலை 28, இரவு 7 மணி
SL vs IND 2nd T20I Pitch Report
இலங்கையில் உள்ள பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 24 டி20 சர்வதேசப் போட்டிகள் நடந்துள்ளன. அதில் 13 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 8 முறை இரண்டாவது பேட்டிங் செய்த கணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி குறைந்தபட்ச சராசரியாக 168 ரன்கள் உள்ளது. மேற்கொண்டு நேற்றைய போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 213 ரன்களை குவித்தது. இதனால் இந்த மைதானம் பேட்டர்களுக்கு பெருமளவு உதவி வருவதால் நிச்சயம் வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
SL vs IND T20I Head To Head Record
மோதிய போட்டிகள் - 30
இந்தியா - 20
இலங்கை - 09
முடிவில்லை- 01
SL vs IND 2nd T20I: Where to Watch?
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையில் பார்க்க முடியும். இந்த போட்டிகளின் நேரடி ஸ்ட்ரீமிங் ஓடிடி இயங்குதளமான சோனி லிவ் (SonyLIV) தளத்திலும் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி ரசிகர்கள் நேலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sri Lanka vs India 2nd T20I Probable Playing XI
இந்திய அணி உத்தேச லெவன்: ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த்/சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரியான் பராக், ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய்/வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
இலங்கை அணி உத்தேச லெவன் : பதும் நிஷங்க, குசல் பெரேரா, குசால் மெண்டிஸ்,சரித் அசலங்கா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷனா, மதீஷ பதிரானா, அசிதா ஃபெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்கா.
Sri Lanka vs India 2nd T20I Dream11 Team
விக்கெட் கீப்பர் - குசல் மெண்டிஸ்
பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், பதும் நிஷங்கா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், குசால் பெரேரா
ஆல்ரவுண்டர்கள் - தசுன் ஷனகா, அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), வனிந்து ஹசரங்க (துணை கேப்டன்)
பந்துவீச்சாளர்கள் - முகமது சிராஜ், மதீஷா பதிரானா
SL vs IND 2nd T20 Dream11 Prediction, Today Match SL vs IND, SL vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs IND Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs India
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now