Advertisement
Advertisement

இலங்கை vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது.

Advertisement
இலங்கை vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 06, 2024 • 02:16 PM

Sri Lanka vs India 3rd ODI Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஆகஸ்ட் 07) கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனெவே இலங்கை அணி தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பிலும், அதேசமயம் தொடரை சமனில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.   

Bharathi Kannan
By Bharathi Kannan
August 06, 2024 • 02:16 PM

SL vs IND 3rd ODI: போட்டி தகவல்கள்

Trending

மோதும் அணிகள் - இலங்கை vs இந்தியா  இடம் - ஆர்.பிரேமதாசா மைதானம், கொழும்பு நேரம் - ஆகஸ்ட் 07, மதிய 2.30 மணி

SL vs IND 3rd ODI Pitch Report

கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் இதுவரை 166 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன, அதில் 89 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 65 போட்டிகளில் இலக்கை விரட்டிய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி 231 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 375 ரன்கள் உள்ளது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி தடுமாறியதையும் பார்க்க முடிந்தது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SL vs IND ODI Head To Head Record

மோதிய போட்டிகள் – 170 இந்தியா - 99 இலங்கை - 58 முடிவில்லை - 13

SL vs IND 3rd ODI: Where to Watch?

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையில் பார்க்க முடியும். இந்த போட்டிகளின் நேரடி ஸ்ட்ரீமிங் ஓடிடி இயங்குதளமான சோனி லிவ் (SonyLIV) தளத்திலும் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி ரசிகர்கள் நேலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sri Lanka vs India 3rd ODI Probable Playing XI

இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர்/ரிஷப் பந்த், கே.எல். ராகுல், ரியான் பராக்/ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரனா/முகமது சிராஜ்.

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க (கே), கமிந்து மெண்டிஸ், ஜனித் லியானகே, துனித் வெல்லாலகே, அகில தனஞ்சய, அசித்த ஃபெர்னாண்டோ, ஜெஃப்ரி வண்டர்சே

Sri Lanka vs India 3rd ODI Dream11 Team

விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த், குசல் மெண்டிஸ் பேட்டர்கள் - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பதும் நிஷங்கா ஆல்-ரவுண்டர்கள் - அக்ஸர் படேல், துனித் வெல்லாலகே, சரித் அசலங்கா பந்துவீச்சாளர்கள் – வாஷிங்டன் சுந்தர், ஜெஃப்ரி வண்டர்சே

SL vs IND 3rd ODI Dream11 Prediction, Today Match  SL vs IND, SL vs IND Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs IND Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs India

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement