
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2ஆவது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள்ளுக்கு இடையேயாப 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று (ஜூலை 23) நடக்கிறது.
இத்தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான ஒவ்வொரு வீரர்களும் துடிப்புடன் செயல்படுகிறார்கள். தொடக்க ஆட்டத்தில் கேப்டன் ஷிகர் தவான், இஷான் கிஷன், பிரித்வி ஷா ஆகியோரின் பேட்டிங் அருமையாக இருந்தது. 2ஆவது ஆட்டத்தில் இந்திய அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றிய தீபக் சாஹர் 69 ரன்கள் விளாசி ஹீரோவாக ஜொலித்தார். சூர்யகுமார் யாதவின் அரைசதமும் உதவிகரமாக இருந்தது. பந்து வீச்சை பொறுத்தமட்டில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் விக்கெட் வீழ்த்தியதுடன், சிக்கனமாகவும் பவுலிங் செய்து கவனத்தை ஈர்த்தார்.