
SL vs SA, 2nd T20I: Sri Lanka have bowled out by 103 runs (Image Source: Google)
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் சண்டிமல் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ - பனுகா ரஜபக்ஷ இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
பின் ராஜபக்க்ஷ 20 ரன்களிலும், ஃபெர்னாண்டோ 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி தடுமாறியது.