Advertisement

இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்பிரிக்கா!

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
SL vs SA: South Africa register a victory in the third T20I in Colombo
SL vs SA: South Africa register a victory in the third T20I in Colombo (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 14, 2021 • 10:26 PM

இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 14, 2021 • 10:26 PM

அதன்படி களமிறங்கிய அந்த அணி எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Trending

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக குசால் பெரேரா 39 ரன்களைச் சேர்த்தார். 

அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் - ரீசா ஹெண்ட்ரிக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தனர். 

இதன் மூலம் 14.4 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்க அணி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றி அசத்தியது. மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement