
SL vs SA: South Africa set a target on 164 against Sri lanka in the first T20I (Image Source: Google)
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் - ரீசா ஹெண்ட்ரிக்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
பின் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டி காக் 36 ரன்களிலு, ஹெண்ட்ரிக்ஸ் 38 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.