Advertisement

SL vs WI, 1st Test: தத்தளிக்கும் வெஸ்ட் இண்டீஸ்; வெற்றியின் அருகில் இலங்கை!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் உள்ளது. 

Advertisement
SL vs WI, 1st Test: Hosts four wickets away from victory (Stumps, Day 4)
SL vs WI, 1st Test: Hosts four wickets away from victory (Stumps, Day 4) (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 24, 2021 • 07:42 PM

இலங்கை வெஸ்ட் இண்டீஸ் அணிகளிக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் பேட்டிங் செய்த இலங்கை முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் எடுத்தது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 156 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 24, 2021 • 07:42 PM

கேப்டன் திமுத் கருணாரத்னே இதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 348 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.

Trending

இந்த கடின இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் இலங்கையின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. 18 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் தத்தளித்துக் கொண்டிருந்தது. 

அதன்பின் ஜோடி சேர்ந்த பொனர் - ட சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. 

இலங்கை தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், லசித் எம்புல்தோனியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நாளை ஐந்தாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 296 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement