
SL vs WI, 1st Test: Karunaratne, Nissanka shine as hosts put up dominant performance (Stumps, Day 1) (Image Source: Google)
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்யவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர்கல் பதும் நிஷங்கா - கேப்டன் கருணரத்னே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
அதன்பின் 56 ரன்கள் எடுத்திருந்த நிஷங்கா கேப்ரியல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஓஷதா ஃபெர்னாண்டோ, ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் தலா 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.