இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பல்லகலேவில் நடைபெறவுள்ளது.
Sri Lanka vs West Indies 2nd ODI Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் இலங்கை அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இந்த வெற்றியின் காரணமாக இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை பல்லகலேவில் உள்ள சர்வதேச் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியடைந்த கையோடும், இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றிபெற்ற கையோடும் இப்போட்டியை எதிர்கொள்கின்றன. இதில் இலங்கை அணி வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன்செய்ய முயற்சிகும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
SL vs WI 2nd ODI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ்
- இடம் - பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லகலே
- நேரம் - அக்.23 இரவு 2.30 மணி (இந்திய நேரப்படி)
SL vs WI 2nd ODI: Pitch Report
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி பல்லகலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 43 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 17 முறை முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 24 போட்டிகளில் சேசிங் செய்தஅணி வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 253 ரன்களாவும், மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக 381 ரன்களும் உள்ளன. மேலும் இந்த மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்பதால் நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
SL vs WI 2nd ODI: Where to Watch?
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.
SL vs WI 2nd ODI: Head To Head Record
- மொத்தம் - 65
- இலங்கை - 31
- வெஸ்ட் இண்டீஸ் - 31
- முடிவில்லை - 03
Sri Lanka vs West Indies 2nd ODI: Probable Playing XI
இலங்கை உத்தேச லெவன்: நிஷான் மதுஷ்க, பதும் நிஷங்கா/அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா (கே), சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, ஜெஃப்ரி வான்டர்சே, அசித்த ஃபெர்னாண்டோ
வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், ஷாய் ஹோப்(கேப்டன்), கேசி கார்டி, ரோஸ்டன் சேஸ், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், குடகேஷ் மோட்டி, ஹேடன் வால்ஷ், ஜேடன் சீல்ஸ், அல்ஸாரி ஜோசப்
Sri Lanka vs West Indies 2nd ODI Dream11 Prediction
- விக்கெட் கீப்பர் - குசால் மெண்டிஸ், ஷாய் ஹோப்
- பேட்ஸ்மேன்கள் - பதும் நிஷங்கா, பிராண்டன் கிங் (கேப்டன்), நிஷான் மதுஷ்கா
- ஆல்ரவுண்டர் - வநிந்து ஹசரங்கா (துணைக் கேப்டன்), சரித் அசலங்கா, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரிடோ ஷெப்பர்ட்
- பந்துவீச்சாளர்கள் - அசிதா ஃபெர்னாண்டோ, அல்ஸாரி ஜோசப்
SL vs WI 2nd ODI Dream11 Prediction, Today Match SL vs WI, SL vs WI Dream11 Team, Fantasy Cricket Tips, SL vs WI Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sri Lanka vs West Indies
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now