Advertisement
Advertisement
Advertisement

SL vs ZIM, 3rd ODI: ஜிம்பாப்வேவை பந்தாடி தொடரை வென்றது இலங்கை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 21, 2022 • 21:29 PM
SL vs ZIM, 3rd ODI: Sri Lanka beat Zimbabwe by 184 runs and get the series 2-1
SL vs ZIM, 3rd ODI: Sri Lanka beat Zimbabwe by 184 runs and get the series 2-1 (Image Source: Google)
Advertisement

இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பதும் நிஷங்கா, சரித் அசலங்கா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்களைச் சேர்த்தது. 

Trending


இதில் அதிகபட்சமாக பதும் நிஷங்கா 55 ரன்களையும், சரித் அசலங்கா 52 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி, இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இறுதியில் அந்த அணி 24.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்களை மட்டுமே சேர்த்தது. இலங்கை தரப்பில் ஜெஃப்ரி வான்டர்சே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் இலங்கை அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா ஆட்டநாயகனாகவும், பதும் நிஷங்கா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement