
SL vs ZIM, 3rd ODI: Sri Lanka finishes off 254/9 (Image Source: Google)
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லகலேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் நிஷங்கா அரைசதம் கடந்தார்.
பின்னர் 36 ரன்களில் குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்க, 55 ரன்களில் நிஷங்காவும் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ், தினேஷ் சண்டிமல் ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.