Advertisement

இலங்கை vs ஜிம்பாப்வே, மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 10, 2024 • 19:11 PM
இலங்கை vs ஜிம்பாப்வே, மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை vs ஜிம்பாப்வே, மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தற்போது நடைபெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் இப்போட்டி முடிவின்றி அமைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவிலுள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs ஜிம்பாப்வே
  • இடம் - ஆர்.பிரமதோசா கிரிக்கெட் மைதானம், கொழும்பு
  • நேரம் - மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)

நேரலை

இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இத்தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அதேபோல் ஃபேன் கோட் ஓடிடி தளத்திலும் இத்தொடரை காணலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 63
  • இலங்கை - 48
  • ஜிம்பாப்வே -  12
  • முடிவில்லை - 03

பிட்ச் ரிப்போர்ட்

பிரேமாதாச கிரிக்கெட் மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்பகிறது. இதனால் பேட்டர்கள் இந்த மைதானத்தில் சோபிப்பது கடிமான ஒன்றாக இருக்கும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

உத்தேச லெவன்

இலங்கை: அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ்(கே), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, சஹான் ஆராச்சிகே, தசுன் ஷனகா, துஷ்மந்த சமீர, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, தில்ஷன் மதுஷங்க

ஜிம்பாப்வே: ஜிம்பாப்வே: தகுத்ஸ்வானாஷே கைடானோ, டினாஷே கமுன்ஹுகம்வே, கிரெய்க் எர்வின் (கே), மில்டன் ஷும்பா, சிக்கந்தர் ராசா, ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, ஃபராஸ் அக்ரம், ரிச்சர்ட் நகரவா, பிளஸ்ஸிங் முசரபானி, தபிவா முஃபுட்சா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம
  • பேட்டர்ஸ்: கிரேக் எர்வின், ரியான் பர்ல், சரித் அசலங்கா(துணைக்கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள்: சிக்கந்தர் ராஸா (கேப்டன்), தசுன் ஷனகா, துனித் வெல்லலகே
  • பந்துவீச்சாளர்கள்: ரிச்சர்ட் ங்கராவா, மகேஷ் தீக்ஷனா, தில்ஷன் மதுஷங்கா

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement