Advertisement

PAKW vs SLW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!

இலங்கை மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisement
SLW vs PAKW 2nd WT20I: Pakistan Clinch Series 2-0 With A 7 Wicket Win Against Sri Lanka
SLW vs PAKW 2nd WT20I: Pakistan Clinch Series 2-0 With A 7 Wicket Win Against Sri Lanka (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 26, 2022 • 10:38 PM

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை மகளிர் அணி தற்போது 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 26, 2022 • 10:38 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி கராச்சியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Trending

அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அத்தபத்து 5 ரன்னிலும், ரணசிங்க 8 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஹாசினி பெரேரா - டி சில்வா இணை சற்றுநேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் பெரேரா 35 ரன்னிலும், டி சில்வா 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

அதைத்தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகள் ரன் குவிக்க தடுமாற, 20 ஓவர்கள் முடிவில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் மகளிர் அணியில் குல் ஃபெரோஸா, முனீப் அலி, இரம் ஜாவித் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பிஸ்மா மரூஃப் - ஆயிஷா நசீம் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் 17.1 ஓவர்களில் பாகிஸ்தான் மகளிர் அணி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தியது. 

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement