
SMAT 2021: Goa beat Tamil Nadu by 7 wickets (Image Source: Google)
சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியின் லீக் சுற்றில் தமிழ்நாடு அணி இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் கோவாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் நடராஜன், பாபா அபரஜித், சந்தீப் வாரியர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது.
இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. இதில் சஞ்சய் யாதவ் 38 ரன்களும், ஷாருக் கான் 26 ரன்களும் எடுத்தார்கள். கோவா அணி தரப்பில் ஸ்ரீகாந்த் வாக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து பேட்டிங் செய்த கோவா அணி, 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் ஷுபம் ரஞ்சனே அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.