
SMAT 2021 Quarter Final 2: Karnataka beat Bengal by super over thriller (Image Source: Google)
சையித் முஷ்டாக் அலி தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது காலிறுதிச்சுற்று போட்டியில் கர்நாடகா - பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய கர்நாடக அணி கருண் நாயரின் அதிரடியினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கருண் நாயர் 55 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் இலக்கை துரத்திய பெங்கால் அணி விருத்திக் சாட்டர்ஜி, ஷபாஷ் அஹ்மத் ஆகியோரின் அதிரடியாக 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. இதனால் இப்போட்டி டிராவில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு சென்றது.