Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இளம் இந்திய வீரர்!

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஸ்மித் படேல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement
Smit Patel quits BCCI system to 'carve out a second coming of sorts' in America
Smit Patel quits BCCI system to 'carve out a second coming of sorts' in America (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 31, 2021 • 10:29 PM

இந்திய அணியின் இளம் வீரர் ஸ்மித் படேல். இவர் கடந்த 2012 ஆம் நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதன்பின் இந்திய ஏ அணிகளிலும், குஜராத் அணிக்காக உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வந்தார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 31, 2021 • 10:29 PM

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது 28 வயதான இவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

Trending

மேலும், இவர் தற்போது புதிதாக உருவாகவுள்ள அமெரிக்க அணிக்காக விளையாடவும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு நடைபெறவுள்ள கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் டிரிடாட் டொபாக்கோ அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய ஸ்மித் படேல், “இது என்னுடைய புது இன்னிங்ஸ். மேலும் இது ஒரு புதுவிதமான பயணமாக அமையும் என நினைக்கிறேன். 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையின் போது சிறப்பாக விளையாடியும், பின்னர் விக்கெட் கீப்பராக இடம் கிடைக்காத விரக்தி, காரணமாகவும் நான் தற்போது இம்முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement