
Sophie Devine secures Super Over victory after Brisbane Heat collapse (Image Source: Google)
மகளிர் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 5ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் மகளிர் அணி, பிரிஸ்பேன் ஹீட் மகளிர் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காச்சர்ஸ் அணி பெத் மூனியின் நிதான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்தது. இதில் பெத் மூனி 40 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி இறுதிவரை போராடி போட்டியை சமன் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்தது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.