பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னிக்கு வாழ்த்து தெரிவித்த சவுரவ் கங்குலி!
பிசிசிஐ தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரோஜர் பின்னிக்கு முன்னாள் தலைவரான சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருந்த சவுரவ் கங்குலியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக ஜெய் ஷாவே தொடர்ந்து நீடிப்பார் எனக்கூறப்பட்டுள்ளது.
புதிய தலைவருக்காக தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவரின் ஆதரவுடன் ரோஜர் பின்னி கெத்துக்கட்டினார். கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவராக பதிவி வகித்த ரோஜர் பின்னி, இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 205 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
Trending
1983 உலககோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ரோஜர் பின்னி. அந்த தொடரில் ரோஜர் பின்னி 18 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்று இருந்தார். இதே போன்று 1985ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் சீரியஸில் ரோஜர் பின்னி 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இந்த நிலையில் பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோஜர் பின்னி-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், " ரோஜர் பின்னிக்கு எனது வாழ்த்துகள். இந்திய கிரிக்கெட் வலுவாக உள்ளது. பிசிசிஐ-யின் புதிய குழு இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்லும். எனவே அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வாழ்த்து கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now