
ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்த கிரிக்கெட் தொடரின் ஆணையர் ரவி சாஸ்திரி.
இம்முறை லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் 4 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன. மொத்தம் 15 போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சௌரவ் கங்குலி தலைமையிலான இந்தியா மகாராஜாஸ் மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான உலக ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதும் சிறப்பு போட்டி ஒன்று நடத்தப்படுகிறது.
செப்டம்பர் 16ஆம் தேதி இந்த போட்டி நடத்தப்படுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில், அவரது கேப்டன்சியில் அவரால் உருவாக்கப்பட்டு, பிற்காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய வீரேந்திர சேவாக், முகமது கைஃப், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் ஆகிய மிகச்சிறந்த வீரர்கள் ஆடுகின்றனர்.