Advertisement

ஒரே தொடரில் மூன்று கேப்டன்களை மாற்றி மோசமான சாதனைப் படைத்த தென் அப்பிரிக்கா!

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி மூன்று கேப்டன்களை நியமித்து, ஒரே தொடரில் மூன்று கேப்டன்களை நியமித்த முதல் அணி எனும் மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

Advertisement
South Afria are the first team to use three different captains in every match of India ODI series
South Afria are the first team to use three different captains in every match of India ODI series (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 11, 2022 • 04:06 PM

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக அரைமணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 1 போட்டியை வென்றுள்ள நிலையில், தொடரை தீர்மானிக்கும் முக்கிய போட்டி இன்று தொடங்கியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 11, 2022 • 04:06 PM

இந்தியாவை விட தென் ஆப்பிரிக்க அணிக்கு தான் இது முக்கிய போட்டியாகும். காரணம் , டெஸ்ட் சாம்பியன்ஷிப் போல், ஒருநாள் சாம்பியன்ஷிப புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி 11ஆவது இடத்தில் உள்ளது.

Trending

முதல் 8 இடங்களை பிடிக்கும் அணியே, நேரடியாக அடுத்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். இதனால், தென்னாப்பிரிக்க அணி தகுதி சுற்றில் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்றைய வெற்றி தென்னாப்பிரிக்கா அணிக்கு மிகவும் முக்கியம் என கருதப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை வரை கன மழை பெய்தது. இதனால், அருண் ஜெட்லி மைதானம் ஈரப்பதத்துடன் காட்சி அளிக்கிறது. மைதானத்தில் ஆங்காங்கே இருக்கும் நீரை வெளியேற்றும் முயற்சியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் டாஸ் மதியம் 1.40 மணிக்கு தான் வீசப்பட்டது.

இதனிடையே, மைதானம் சிறிய அளவு என்பதால், சிக்சர்கள், பவுண்டரிகள் அதிக அளவு செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீசினார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் தென் ஆப்பரிக்கா அணியில் ஒரே தொடரில் 3ஆவது முறையாக கேப்டன் மாற்றப்பட்டார்.

முதல் போட்டியில் பெவுமா, இரண்டாவது போட்டியில் கேசவ் மகாராஜ் என கேப்டன்கள் மாறிய நிலையில், தற்போது டேவிட் மில்லர், 3ஆவது முறை கேப்டனாக மாற்றப்பட்டுளளார். கேசவ் மகாராஜ் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. தென் ஆப்பிரிக்க அணியில் ஆண்டிரிச் நோர்ட்ஜே, ஆண்டில் பெலுக்வாயோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement