
South Africa Announce Squad For The Limited-Overs Tour Of Sri Lanka (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி கொழும்புவிலுள்ள பிரமதாச மைதானத்தில் நடக்கிறது. மேலும் இத்தொடரின் அனைத்டு போட்டிகளும் பிரமதாச மைதானத்தில் நடக்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து குயின்டன் டி காக், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.