Advertisement

NZ vs SA, 2nd Test: ஃபாலோ ஆனை தவிர்க்க போராடும் நியூசிலாந்து!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி  157 ரன்களைச் சேர்த்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan February 26, 2022 • 11:49 AM
South Africa continue their series fightback on day two
South Africa continue their series fightback on day two (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இந்நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங் தேர்வு செய்தது .

Trending


தென் ஆப்பிரிக்காவின் டீன் எல்கர் , சரேல் எர்வீ தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த நிலையில், கேப்டன் டீன் எல்கர் 41 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சரேல் எர்வீ சதமடித்து, 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்திருந்தது. வெண்டர் டுசன் 13 ரன்னும், பவுமா 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. வெண்டர் டுசன் 35 ரன்னிலும், பவுமா  29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் ஜான்சேன், மகாராஜ் ஜோடி 62 ரன்கள் சேர்த்தது.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜான்சன் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.நியூசிலாந்து தரப்பில் வாக்னர் 4 விக்கெட், மேட் ஹென்றி 3 விக்கெட், ஜேமிசன் 2 விக்கெட், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியில் டாம் லேதம், வில் யங், டேவன் கான்வே, ஹென்றி நிக்கோலஸ், டாம் பிளண்டல் என அடுத்தடுத்து சொற்ப ரன்களிலேயே விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் - காலின் டி கிராண்ட்ஹோம் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்ட இழப்பை தவிர்த்தது. இதில் கிராண்ட்ஹோம் அரைசதம் கடந்தார். 

இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து 207 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement