
South Africa leaning heavily on its bowling attack, admits skipper Bavuma (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இப்போட்டிக்கு பிறகு பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, தங்கள் அணி பந்துவீச்சில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இப்போட்டியில் தோல்வியடைந்தது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் இதனை நாங்கள் விரும்பவில்லை. அணியிலுள்ள சக வீரர்களிடம் நாங்கள் நிறைய ஆலோசிக்க உள்ளது.