
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை ஐசிசி-யின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என்று ஐசிசி ஏற்கனவே கெடு விதித்துள்ளதால் தற்போது அனைத்து நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணிகளை அறிவிக்க தயாராக இருக்கின்றன.
இந்நிலையில் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த அணி வெற்றி பெறும்? எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்? எந்த பந்துவீச்சாளர் அதிக விக்கெட்டுகளை எடுப்பார்? எந்த பேட்ஸ்மேன் அதிக ரன்களை குவிப்பார் என முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கணிப்புகளை வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணியை உலக கோப்பையில் வழிநடத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் தற்போது எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரை கைப்பற்றும் வாய்ப்புள்ள மூன்று அணிகள் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்துள்ளார். அதில் அவர் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியின் பெயரை குறிப்பிடாதது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.