
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. அதன்படி ஒவ்வொரு அணியும் பிற நாடுகளுடன் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றன.
அந்தவகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் ஒருநாள் அணிக்கு டெம்பா பவுமாவும், டி20 அணிக்கு எய்டன் மார்க்கமும் கேப்டன்களாக நியமனம் செய்யப்படுள்ளனர்.