
South Africa T20 Team Announced For India's T20 Tour, Studds Gets A Maiden Call-Up (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இம்மாதம் இறுதியுடன் இத்தொடர் முடிவடையவுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
வர்ய்ம் ஜூன் 9 அன்று டெல்லியில் தொடங்கும் இத்தொடர், ஜூன் 19 அன்று பெங்களூரில் நிறைவுபெறுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஆண்ட்ரிச் நோர்ட்ஜே அணியில் இடம்பெற்றுள்ளார்.