
South Africa To Tour West Indies Ahead Of Women's World Cup Qualifiers (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான தொடர் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடனான தொடரை நடத்தவுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி தென் ஆப்பிரிக்க மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இத்தொடரானது ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் தொடங்கும் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இத்தொடரனான அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் போட்டியாக நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.