SA vs IND, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பார்லில் நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
Trending
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்லில் நாளை நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா - இந்தியா
- இடம் - போலண்ட் பார்க், பார்ல்
- நேரம் - மதியம் 2 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றது.
அதிலும் முதல் வரிசை வீரர்கள் சொதப்பிய போதும், பவுமா - டுசென் இணை நிலைத்து விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளது அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதேசமயம் பந்துவீச்சில் அந்த சிறப்பாக செயல்பட்டுள்ளதால் நிச்சயம் இப்போட்டியிலும் வென்று தொடரை வெல்ல காத்திருக்கிறது.
கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங்,பவுலிங் என இரு பிரிவிலும் சொதப்பியது. பந்துவீச்சாளர்கள் தேவையான நேரத்தில் விக்கெட்டை கைப்பற்றாததும், பேட்ஸ்மேன்கள் சரிவர விளையாடாததும் அணியின் தோல்விக்கான காரணங்களாக பார்க்க படுகிறது.
இருப்பினும் ஷிகர் தவான், விராட் கோலி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இந்திய அணி இத்தொடரில் நிடிக்கமுடியும்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் -85
- தென் ஆப்பிரிக்கா வெற்றி - 47
- இந்தியா வெற்றி - 35
- முடிவில்லை - 3
உத்தேச அணி
தென் ஆப்பிரிக்கா : குயின்டன் டி காக், ஜென்னெமன் மலான், ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பவுமா(கே), டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, லுங்கி இங்கிடி
இந்தியா: கேஎல் ராகுல் (கே), ஷிகர் தவான், விராட் கோலி,ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர்/ சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், ரிஷப் பந்த்
- பேட்டர்ஸ் - கேஎல் ராகுல், விராட் கோலி, டெம்பா பவுமா, ரஸ்ஸி வான் டெர்-டுசென்
- ஆல்-ரவுண்டர்கள் - மார்கோ ஜான்சன், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ
- பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், தப்ரைஸ் ஷம்சி
Win Big, Make Your Cricket Tales Now