SA vs IND: தோனியின் சாதனையை தகர்ப்பாரா ரிஷப் பந்த்?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய விக்கெட் கீப்பர் எனும் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி 26ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரின்போது ஓய்வில் இருந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். தோனியின் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் கீப்பராக செயல்பட்டு வரும் பந்த் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
Trending
இந்நிலையில் இந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது தோனியின் மிகப்பெரிய சாதனையை ஒன்றினை முறியடிக்க ரிஷப் பண்ட் காத்திருக்கிறார். அந்த சாதனை யாதெனில் இதுவரை இந்திய விக்கெட் கீப்பராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை தோனி வைத்திருந்தார்.
தோனி தனது 36ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது 100 பேரை ஆட்டமிழக்க காரணமாக அமைந்து இருந்தார். ஆனால் தற்போது இந்த சாதனையை எட்டிப்பிடிக்கவுள்ள ரிஷப் பந்த், 25 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடியுள்ள பண்ட் 89 கேட்ச் மற்றும் 8 ஸ்டம்பிங் என 97 வீரர்கள் ஆட்டமிழக்க காரணமாக அமைந்துள்ளார்.
மேலும் எதிர்வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் 3 விக்கெட்டுகள் விழ காரணமாக இருக்கும் பட்சத்தில் குறைந்த போட்டிகளில்100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now