உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. 1987, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் நடைபெறும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப் 10 கிரிக்கெட் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.
முன்னதாக இத்தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்திருந்தது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் தங்கள் உலகக்கோப்பை அணியை தேர்வு செய்து அறிவித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்பட்டது.
Trending
இந்நிலையில் இந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் டி காக், ஐடன் மார்கம், டேவிட் மில்லார், ஹென்ரிச் கிளாசென், லுங்கி இங்கிடி, காகிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்ட்ஜே உள்ளிட்ட நடத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
அதேசமயம் சிசாண்டா மகாலா, ஜெரால்ட் கோட்ஸி, ரஸ்ஸி வேண்டர் டூசென் ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், டொனவோன் ஃபெரீரா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
தென் ஆப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கே), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், சிசண்டா மகலா, கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ராம், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென்.
Win Big, Make Your Cricket Tales Now