
'Special' Siraj Can Be A Really Big Name In International Cricket, Says VVS Laxman (Image Source: Google)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் தரம் கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, நடராஜன் என தரமான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை தன்வசம் வைத்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் இந்திய அணியின் டெஸ்ட் பவுலிங் யூனிட்டின் முதன்மை வீரர்களில் ஒருவராக உருவெடுத்த முகமது சிராஜ், அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வீரராக ஜொலிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய லக்ஷ்மன், கடந்தாண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக பந்துவீசி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதனால் இந்திய டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தையும் பிடித்தார்.