
Spinner Jeffrey Vandersay Named In Sri Lanka's Test Squad Due To Performance Against Australia In OD (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிரது. டி20 தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை இலங்கை அணியும் வென்ற நிலையில், அடுத்ததாக டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது.
இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் 29ஆம் தேதியும், 2ஆவது டெஸ்ட் ஜூலை 8ஆம் தேதியும் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான திமுத் கருணரத்னே தலைமையிலான 18 வீரர்களை கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்த ரிஸ்ட் ஸ்பின்னரான ஜெஃப்ரி வாண்டர்சே டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.