
SRH Looking To Learn And Improve After Loss Against RR: Kane Williamson (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் கடந்த சீசன் சரியாக அமையவில்லை. புள்ளிபட்டியலில் இந்த அணிகளும் கடைசி இரண்டு இடங்களை தான் பிடித்திருந்தது.
இந்நிலையில், நேற்று நடந்த இப்போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 61 ரன்கள் வித்தியசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ், 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் 55 ரன்களை விளாசினார். மேலும், தேவ்தட் படிக்கல் 41 ரன்களுடனும் ஜாஸ் பட்லர் 35 ரன்களும் எடுத்தனர்.