
SRH's T Natarajan Tests Positive Ahead DC Clash (Image Source: Google)
கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் - டெல்லி அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் பரிசோதனையில் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நடராஜனுடன் தொடர்பில் இருந்த சக வீரர் விஜய் சங்கர், விஜய் குமார் (அணி மேலாளர்), ஷ்யாம் சுந்தர் (பிசியோதெரபிஸ்ட்), அஞ்சனா வன்னா (மருத்துவர்), துஷார் கேத்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர் பி. கணேசன் ஆகியோரும் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.