
Sri Lanka announce squads for Australia T20Is (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் ஜூன் 7, 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 டி20போட்டிகள் நடக்கின்றன.
இந்த டி20 தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணியில் ஐபிஎல்லில் அபாரமாக விளையாடிய வனிந்து ஹசரங்கா மற்றும் பானுகா ராஜபக்சா ஆகிய இருவரும் கம்பேக் கொடுத்துள்ளனர்.
கடைசியாக இலங்கை அணி இந்தியாவிற்கு எதிராக ஆடிய தொடரில் இவர்கள் பங்கேற்கவில்லை. ஹசரங்கா கரோனாவால் பாதிக்கப்பட்டதால் ஆடவில்லை. ராஜபக்சா ஃபிட்னெஸ் பிரச்னையால் ஆடவில்லை. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த ராஜபக்சா, பின்னர் இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓய்வு முடிவை வாபஸ் பெற்றார்.