Advertisement

SL vs BAN : சீனியர் வீரர்கள் நோ; அறிமுக வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

வங்கதேச அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Sri Lanka announces 18-man squad for Bangladesh ODI series
Sri Lanka announces 18-man squad for Bangladesh ODI series (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 12, 2021 • 10:01 PM

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. வரும் மே 23 தேதி தொடங்கவுள்ள இத்தொடரின் அனைத்து போட்டிகளும் தாக்கவிக் நடைபெறுமென வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 12, 2021 • 10:01 PM

Trending

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 உலக கோப்பையை கருத்தில்கொண்டு இலங்கை ஒருநாள் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று அண்மையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. 

அதனால் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து திமுத் கருணரத்னே, ஆஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால் ஆகிய சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாமல், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குசால் பெரேரா கேப்டனாகவும் குசால் மெண்டிஸ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி: குசால் பெரேரா(கேப்டன்), குசால் மெண்டிஸ்(துணை கேப்டன்), ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, அசிதா ஃபெர்னாண்டோ, பினுரா ஃபெர்னாண்டோ, ஷிரான் ஃபெர்னாண்டோ, தனுஷ்கா குணதிலகா, நிசாங்கா, தனஞ்செயா டி சில்வா, ஆஷென் பண்டாரா, நிரோஷன் டிக்வெல்லா, ஷாங்கா, இசுரு உடானா, துஷ்மந்தா சமீரா, ரமேஷ் மெண்டிஸ், லக்‌ஷன் சந்தாகான், அகிலா தனஞ்செயா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement