
Sri Lanka Announces Provisional Squads For Home Series Against Australia (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணி அடுத்தமாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடர் ஜூம் 7ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர்களுக்கான இலங்கையின் தற்காலிக அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் அணிக்கு திமுத் கருணரத்னேவும், ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு தசுன் ஷானகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக பாட் கம்மின்ஸும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு ஆரோன் ஃபிஞ்சும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.