
Sri Lanka Announces T20I Squad For Australia Series; Kusal Mendis, Gunathilaka Return (Image Source: Google)
இலங்கை அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
பிரவரி 11ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது பிப்ரவரி 20ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டிகள் அனைத்தும் சிட்னி, மனுகா ஓவல், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான இலங்கை அணியில் தனுஷ்கா குணத்திலகா, குசால் மெண்டிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.