இனி யாரும் இதுமாதிரி தப்பு பண்ண கூடாது ; இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அதிரடி முடிவு!
இங்கிலாந்தில் கரோனா பயோ பபுள் விதிகளை மீறி வெளியே சுற்றிய 3 வீரர்களுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டதுடன், ரூ.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற இலங்கை அணி, டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆகி, அதனுடன் ஒருநாள் தொடரையும் இழந்தது. இங்கிலாந்தில் ஒரு போட்டியில் கூட இலங்கை வெற்றிபெறாமல் நாடுதிருமியது. இதற்கு காரணம் அந்த அணியின் 3 முக்கியமான வீரர்களான குசால் மெண்டிஸ், டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் இலங்கை திரும்பியதுதான்.
ஏனெனில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நடத்தப்படுகிறது. வீரர்கள் அனைவரும் இந்த நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். ஆனால் குசால் மெண்டிஸ், தனுஷா குணதிலகா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகியயோர் கரோனா பயோ பபுள் விதிகளை மீறி வெளியே சுற்றியதன் விளைவாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டு, இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.
Trending
இந்த வீரர்களின் பொறுப்பற்ற செயல், இலங்கை கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டிக்வெல்லா, குணதிலகா, குசால் மெண்டிஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட்டில் ஆட ஓராண்டும், உள்நாட்டு போட்டிகளில் ஆட 6 மாதங்களும் தடைவிதித்துள்ளது. மேலும் மூவருக்கும் தலா ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இனி இதுமாதிரியான விதிமீறல்களில் வீரர்கள் ஈடுபடக்கூடாது என்பதற்காக தடைவிதித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now