இலங்கை பேட்டிங் பயிற்சியாளருக்கு கரோனா? சிக்கலில் இந்தியா-இலங்கை தொடர்!
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி தங்களுக்குள்ளாக இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியும், தற்போது தாயகம் திரும்பி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் பரிசோதனையில், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Trending
இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இங்கிலாந்து தொடரில் விளையாடிய அனைத்து இலங்கை வீரர்களுக்கும் இன்று மாலை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 13ஆம் தேதி தொடங்கும் நிலையில், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி இத்தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now